Home

Home  /   Home

Home

Banner02

The Vision

Animating individuals and families to live fullness of life and, thus creating a healthy, liberated wholesome society.

நோக்கம்

தனிமனிதர்கள் மற்றும் குடும்பங்கள் நிறைவாழ்வு வாழ வழிகாட்டுவதும், அவ்வாறு ஒரு நலமான, விடுதலையின் முழுமைவாழ்வுச் சமூகம் படைப்பதும்.
பணியற்பணம்:

  1. தனிமனிதர்கள் மற்றும் குடும்பங்கள் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நிறைவாழ்வு வாழ்தலில் தொடர்ந்து வளர்ச்சி பெறுதல்.
  2. அதற்காக தனிமனிதர்களும் குடும்பங்களும் இயக்கமாக இணைந்து ஒருவருக்கொருவர் ஊக்கமளித்தல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்தல் மற்றும் பன்முனைப் பயிற்சிகள் வழங்குதல்.
  3. தனிமனிதர்களாக, தங்களது எழுத்து மற்றம் திறன்களால் தனிமனிதர்களும் குடும்பங்களும் நிறைவாழ்வு வாழப் பங்களித்தல்.
  4. சமூக ஈடுபாட்டினை வளர்த்தலும், ஒரு நலமான விடுதலை பெற்ற முழுமைவாழ்வுச் சமூகம் படைக்க உழைத்தலும்.
img-banner

நிறைவாழ்வுப் பார்வை

மனிதர்களுக்கு வாழ்வு ஒன்று தான். இந்த வாழ்வை முழுமையாக நிறைவாக மகிழ்வுடன் வாழ்வது முக்கியம். நிறைவான வாழ்வு தனி மனிதர்களின் நிறைவு மட்டுமல்ல. மனிதர்கள் சமூகமாக வாழ்வதால் சமூகத்தில் அனைவரும் முழுமையாக வாழும் போது தான் தனிமனிதர்களுக்கும் வாழ்வில் நிறைவு கிடைக்கிறது. அன்புறவுகளும் சமூக ஈடுபாடும் வாழ்வின் இன்றியமையா பகுதிகளே. நிறைவாழ்வு என்பது ஒர தொடரியக்கம், ஒரு நீண்ட பயணம். தனிமனிதர்களாக, குடும்பங்களாக, சமூகங்களாக, வாழ்வின் இனபங்களைப் பகிர்ந்துகொணடு, தீமைகளக் களைந்துகொண்டு, தினம் தினம் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு அர்த்தமிக்கப் பயணம் இது.

தனிமனிதர்கள் என்றாலும் சரி, குடும்பங்கள் என்றாலும் சரி வாழ்வில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. பொதுவாக தனிமனிதர்களும் குடும்பங்களும் சில பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வாழ்கின்றனர். மற்றப் பரிமாணங்களில் இன்னும் வளர வேண்டியவர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பம் செல்வத்தில் செழித்திருக்கலாம். ஆனால் பாசப் பகிர்தலும், பாச ஈடுபாடுகளும் அக்குடும்பத்தில் குறைவாக இருக்கலாம். அது போல ஒரு தனிமனிதர் தன் கல்வியால் அறிவில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கலாம். ஆனால் உடல்நலத்தில் பலவீனமாக இரக்கலாம். மகிழ்ச்சியான நிறைவான வாழ்வு வாழ அனைத்து பரிமாணங்களிலும் வளர்ச்சி பெற்று வாழ்வதே சிறப்பானது.

ஒருவரரை ஒருவர் ஊக்கப்படுத்துதலும் உறுதிப்படுத்துதலும் வாழ்வில் எல்லோருக்கும் தேவை. முழுமை வாழ்வு வாழ்தலுக்கும் இது பொருந்தும். மேலும் தம் பெற்ற வாழ்வின் மகிழ்வு மற்றோரும் பெற்றிட உழைப்பதும் மனிதர்களின் இயல்பைச் சார்ந்தது. எனவே தனிமனிதர்களாகவோ அல்லது குடும்பங்களாகவோ ஒர் இயக்கமாக ஒன்றுகூடுவதும், ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தி, இன்னும் பலரை இத்தகைய வாழ்வுக்கு அழைப்பதும் தேவை என்ற காரணத்தால் ஒரு இயக்கமாகவே இத்தகைய வாழ்வினைப் பார்க்கிறோம்.

நிறைவாழ்வு இயக்கம் என்பது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் தொடர்ந்து வளர்ந்து முழுமைவாழ்வு வாழ்ந்திடவும் அத்தகைய வாழ்வு வாழ மற்றவர்களை ஊக்குவிக்கவும் உதவிசெய்யவும் விரும்பும் தனிமனிதர்கள் மற்றும் குடும்பங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும்.

 

நிறைவாழ்வின் பரிமாணங்கள்

உளவியல் வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு பரிமாணங்களை முழுமை வாழ்வுக்கு முன்மொழிந்துள்ளர். பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின் கீழ்வரும் பரிமாணங்களை தனிமனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் முன்மொழிகிறோம்.

தனிமனிதர்கள்

1. தன்னாட்சி
2. ஆரோக்கியமான அறிவு வாழ்வு
3. ஆரோக்கியமான உணர்ச்சி வாழ்வு
4. உடல் ஆரோக்கியம்
5. ஆரோக்கியமான அறவாழ்வு
6. படைத்தளித்தல்
7. நிறைவான ஆன்மீக வாழ்வு
8. பொருளாதாரத்தில் நிறைவு
9. ஆரோக்கியமான பணி வாழ்வு
10. ஆரோக்கியமான உறவு வாழ்வு
11. சமுதாய ஈடுபாடு
12. ஆரோக்கியமான கலாச்சார வாழ்வு